மீன்பிடி தடைக்காலம் நிறைவு... உற்சாகத்துடன் கடலுக்குள் சென்ற மீனவர்கள்!

தமிழகத்தில் கடற்கரையோர பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடித் தடைக்காலம் ஒவ்வொரு வருடமும் 61 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் நிலையில், நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாகை, குமரி, புதுக்கோட்டை என்று மீனவர்கள் நேற்று நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்க உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். அதே சமயம் மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்தனர்.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல நேற்று காத்திருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீனவ கிராமங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி ஜூன் 14ம் தேதி முதல் வட தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
இந்த அறிவிப்பு குறித்த தகவலை மீனவர்கள் அனைவருக்கும் மீனவ கிராம நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மீன்பிடி தடைகாலம் முடிவடைந்த நிலையில் காற்றின் காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்திருப்பது மீனவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!