ஜனவரி 12ம் தேதி பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை!

 
பழவேற்காடு
 

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், வரும் ஜனவரி 12ஆம் தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற உள்ள ராக்கெட் ஏவுதல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பழவேற்காடு

அன்றைய தினம் PSLV-C62 ராக்கெட் மூலம் EOS-N1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதல் நேரத்தில் பாதுகாப்பு காரணமாக கடல் பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பழவேற்காடு

இதனால் பழவேற்காடு மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் ஜனவரி 12ஆம் தேதி கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ராக்கெட் ஏவுதல் முடிந்த பிறகு வழக்கம்போல் மீன்பிடி பணிகள் தொடங்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!