கொடைக்கானலில் 5 கடைகள் எரிந்து நாசம்! வெல்டிங் வேலை விபரீதம்!

 
கொடைக்கானல்
 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். தமிழகம், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கொடைக்கானலில் தயாரிக்கப்படும் சாக்லெட்டுகள் மிக பிரபலம். தைலம், காய்கறிகள் போன்ற பொருட்களையும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்வது வழக்கம். கொடைக்கானல் – வத்தலக்குண்டு மலைச்சாலையில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குதான் சாக்லெட், தைலம் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன.

தீ விபத்து தீயணைப்பு

இந்தக் கடைகளில் நேற்று மராமத்துப் பணிகள் நடந்தன. அப்போது ஒரு சாக்லெட் கடையில் வெல்டிங் வேலை நடந்தது. எதிர்பாராத விதமாக வெல்டிங் வேலையின்போது தீ பற்றியது. தீ மளமளவென அருகில் உள்ள கடைக்குப் பரவியது. அடுத்தடுத்து இருந்த நான்கு கடைகளிலும் தீ வேகமாகப் பரவி குபுகுபுவென எரிந்தது. உடனடியாகக் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. தைலம் போன்ற பொருட்கள் எரிந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பத்து வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் மொத்தம் ஐந்து கடைகள் முழுமையாக எரிந்து நாசமாயின. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துபோனதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்தக் காரணத்தால் மலைச்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!