சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு... பயணிகள் முன்னதாக வர அறிவுறுத்தல்!
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 18 முதல் சிறப்பு பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விமான நிலைய வெளிப்பகுதி முதல் விமானங்கள் நிற்கும் பகுதி வரை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஜனவரி 30 நள்ளிரவு வரை தொடரும். அனைத்து நுழைவாயில்களிலும் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும். அந்த நாட்களில் ஏழு அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனைகள் அதிகரிப்பதால் பயணிகள் முன்னதாகவே விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
