ஈரோடு இடைத்தேர்தலில் ஐந்து ஓட்டு மிஷின்.. அசந்து போவார்களா வாக்காளர்கள்?! வேற என்னவெல்லாம் சுவாரஸ்யம்?!

 
கருணாநிதி கலைஞர் ஜெயலலிதா

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல்களில் இருந்த கூட்டணி தற்பொழுது ஏடாகூடமாக பிரிந்து கிடக்க, ஈரோடு கிழக்குத் தொகுதியில்  திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, பன்னீர் அணியைச் சேர்ந்த செந்தில்முருகன் உட்பட 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு பரிசீலனையில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக, தேமுதிக ஆகிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உட்பட 83 பேரது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பன்னீர் வேட்பாளர் செந்தில்முருகன் உட்பட்ட 16 பேரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஸ்டாலின் எடப்பாடி உதயநிதி ஈரோடு

வேட்பு மனுக்களை திரும்பப் பெற நேற்று கடைசி நாளாகும். இதில் அமமுக வேட்பாளர் உட்பட 6 பேர் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இறுதியாக போட்டியில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கைச் சின்னம், தேமுதிகவுக்கு முரசு சின்னம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியும் ஈரோடு மாநகராட்சிக் கமிஷனருமான சிவக்குமார் அறிவித்தார். பின்னர், சுயேட்சைகள் உட்பட மற்ற வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடந்தது.

77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்கும் ஒன்று சேர்த்து, 78 சின்னங்கள் பொருத்த வேண்டும். ஒரு இயந்திரத்துக்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்கு பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால், சின்னத்தைக் கண்டுபிடிக்க வாக்காளர்கள் பெரும்பாடு படவேண்டும் என பலர் கூறி வருகின்றனர்.

அண்ணாமலை ஈரோடு

இது என்ன பிரமாதம்..? 1996ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் 33 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1,033 வேட்பாளர்களை களத்தில் இறக்கி அதிரடி காட்டினார்கள். இதனால்  தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பேசப் பட்ட தொகுதியாக இருந்தது. 1,033 பேர் போட்டியிட்டதால் தேர்தல் நடைமுறையில் இது வரை இல்லாத அளவுக்கு பல்வேறு புதுமைகள் நிகழ்த்தப்பட்டன. அதிகம் பேர் போட்டியிட்டதாலேயே ஒத்தி வைக்கப் பட்ட தேர்தல் அது. பின்னர் 120 பக்கங்கள் கொண்ட வாக்குச் சீட்டு புத்தகம், ஒரு வாக்கு கூட பெற்றிடாத 63  வேட்பாளர்களை கண்டது என பல்வேறு சுவையான சுவாரஸ்ய நிகழ்வுகள் கொண்ட தேர்தலாக அந்த தேர்தல் அமைந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web