ஒரே ஓவரில் 5 விக்கெட்… சர்வதேச டி20-யில் இந்தோனேசிய வீரர் புதிய வரலாறு!

 
கெடே
 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை இந்தோனேசிய பௌலர் கெடெ பிரியந்தனா படைத்துள்ளார். கம்போடியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் வெறும் 1 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும்.

முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு விளையாடிய கம்போடியா 16 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 104 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் பந்துவீச வந்த பிரியந்தனா, முதல் மூன்று பந்துகளிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதித்தார்.

அதன்பிறகு ஓவரின் கடைசி இரு பந்துகளிலும் விக்கெட்டுகளை எடுத்த அவர், ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை சாய்த்த முதல் சர்வதேச டி20 வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் உள்நாட்டு கிரிக்கெட்டில் மட்டும் இச்சாதனை நிகழ்ந்துள்ளது. சர்வதேச அரங்கில் இந்தோனேசியாவின் பெயரை உயர்த்திய தருணமாக இந்த போட்டி மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!