தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்!! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

 
தூத்துக்குடி

கடற்கரை நகரமாம் தூத்துக்குடியின்  மையப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற  பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவில். இங்கு பல உற்சவ விழாக்கள்  நடைபெற்றபோதிலும்  சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.  நடப்பாண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  ஏப்ரல் 23ம் தேதி  நேற்று முன்தினம் மேலூர் பத்திரகாளியம்மன் கோவிலில் தேரோட்டத்துக்கு அனுமதி பெறுவதற்கான சிறப்பு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கொடிப்பட்டம் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  கோவில் கொடி மரத்தில் சிவபெருமானின் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோலாகலமாக  கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தூத்துக்குடி

விழா நாட்கள் அனைத்தும் பல்வேறு வாகனங்களில் காலை , மாலை இருவேளைகளிலும்  சுவாமி-அம்பாள்  வீதி உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா மே 3ம் தேதி நடைபெற உள்ளது. சிறிய தேரில் மகா கணபதி, முருகப்பெருமான்,  பெரிய தேரில் சுவாமி சங்கரராமேசுவரர், பாகம்பிரியாள் அம்பாள் ரத வீதிகளில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web