தற்காலிக கொடி கம்பம் நட வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு... !
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தற்காலிக கொடி கம்பங்களை நடுவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் தனித்தனி துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடத்துவோர், குறைந்தது 7 நாட்களுக்கு முன்பாக மண்டல அளவிலான குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

தற்காலிக கொடி கம்பங்கள் தார்ச்சாலை, நடைபாதை, மையத்தடுப்பு, பாலம், கால்வாய் போன்ற இடங்களில் அமைக்க அனுமதி இல்லை. அதிகபட்ச உயரம் 3.50 மீட்டர் மட்டுமே இருக்க வேண்டும். மின்சார கம்பிகளை தொடாத வகையில் அமைக்க வேண்டும். ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பும் விண்ணப்பதாரருக்கே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடி கம்பங்களுக்கு ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கு ரூ.10 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத நிகழ்வுகளுக்கு 7 நாட்களும், மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு 3 நாட்களும் மட்டும் அனுமதி வழங்கப்படும். அனுமதி காலம் முடிந்தவுடன் கொடி கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். விதிமீறல்கள் நடந்தால், கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
