விமானப் பணிப்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்! காதலர் தள்ளி விட்டதாக பெற்றோர் புகார்!

 
அர்ச்சனா

இமாச்சலபிரதேசத்தில் வசித்து வரும் இளம்பெண் 28 வயது அர்ச்சனா திமென் .  இவர் சர்வதேச விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார் அர்ச்சனாவுக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கேரளாவில் வசித்து வரும்  ஆதேசுடன் பழக்கம் ஏற்பட்டது. சாப்ட்வேர் இன்ஜினியரான ஆதேஷ் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார். அர்ச்சனா,  ஆதேஷ்  பழக்கம் காதலாக மாறியுள்ளது.


 

அதன்பிறகு இருவரும் லிவ் இன் முறையில் கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தனர்.  இதில் இருவருக்கும் இடையே சிறுசிறு வாக்குவாதங்களும், பிரச்சினைகளும் வரத் தொடங்கின. இந்நிலையில், விமானப்பணிப்பெண்ணான அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்து ஆதேஷூடன் பெங்களூருவின் கோரமங்கலா அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க தொடங்கினார். இருவரும்  மார்ச் 10ம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தியேட்டருக்கு திரைப்படம் பார்க்க சென்றனர். இரவு வீட்டிற்கு வந்த போது அர்ச்சனாவுக்கும் ஆதேஷூக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் , சண்டை, சச்சரவு ஏற்பட்டுள்ளது.

அர்ச்சனா

 இதன் பிறகு இரவு 12 மணிக்கு  அர்ச்சனா தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றார். பதறி துடித்த ஆதேஷ்  உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.  ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள்  அர்ச்சனா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம்  குறித்து வழக்குப்பதிவு செய்து காதலன் ஆதேஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதில்  அர்ச்சனா 4வது மாடியில் இருந்து கீழே குதித்தாரா? அல்லது அர்ச்சனாவை ஆதேஷ் கீழே தள்ளி கொலை செய்தாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web