'ஏர் இந்தியா' விமான விபத்தில் பலியான பணிப்பெண் உடல்... சொந்த ஊரில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி !

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் பயணம் செய்தவர்கள் 241 பேர் பலியாகினர். அவர்களது உடல் முற்றிலும் எரிந்து விட்டதால் உறவினர்களிடம் சாம்பிள் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் மூலம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏர் இந்தியா விமான பணிப்பெண் சிங்சனின் உடல் மணிப்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. விமானம் விபத்திற்குள்ளான சமயத்தில் விடுதி கட்டிடத்தில் இருந்த 29 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தன. டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான விபத்தில் மணிப்பூரை சேர்ந்த விமான பணிப்பெண் லாமுன்தெம் சிங்சன்(வயது 26) உயிரிழந்தார். அவரது உடல் டி.என்.ஏ பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சிங்சனின் உடல் மணிப்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
திமாபூர் விமான நிலையத்தில் இருந்து காங்போக்பி பகுதி வரை சிங்சனின் உடலுக்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். விமான விபத்தில் உயிரிழந்த லாமுன்தெம் சிங்சன், மணிப்பூரின் குக்கி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது குடும்பத்தினர் இம்பாலில் உள்ள லாம்புலேன் காலணியில் வசித்து வந்த நிலையில், 2023ம் ஆண்டு நடந்த கலவரத்தை தொடர்ந்து அவர்கள் காங்போக்பி பகுதிக்கு குடிபெயர்ந்தனர். இந்த விமான விபத்தில் மணிப்பூரின் மெய்தி இனத்தை சேர்ந்த மற்றொரு விமான பணிப்பெண் கந்தோய் சர்மா என்பவரும் உயிரிழந்தார். அவரது உடல் விரைவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!