மஸ்கட் உட்பட வளைகுடா நாடுகளில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவை தொடக்கம்!
ஈரான் உட்பட வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்ததால் சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் ஈரான், ஈராக், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. குறிப்பாக துபாய், அபுதாபி விமான நிலையங்களுக்கு அருகே ஏற்பட்ட சேதம் காரணமாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியர்களை மீட்க இந்திய தூதரகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. IndiGo நிறுவனம் சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து மும்பை, டெல்லி, ஐதராபாத், அகமதாபாத் நகரங்களுக்கு 10 சிறப்பு விமானங்களை இயக்குகிறது. SpiceJet நிறுவனம் புஜைராவிலிருந்து டெல்லி, மும்பை, கொச்சி நகரங்களுக்கு மீட்பு சேவைகளை அறிவித்துள்ளது.

Air India Express மஸ்கட் சேவையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், மற்ற வளைகுடா சேவைகள் நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. Etihad Airways நிறுவனம் நாளை மதியம் 2 மணி வரை வழக்கமான சேவைகளை நிறுத்தியுள்ளது. நிலைமையை கண்காணித்து வரும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், விமான நிறுவனங்களின் உறுதிப்படுத்தல் இல்லாமல் விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
