இந்தியா-பாகிஸ்தான் போட்டி தாக்கம்… இலங்கை விமான டிக்கெட் விலை ஏற்றம்!
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி காரணமாக இலங்கை செல்லும் விமான டிக்கெட் கட்டணம் திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக பிப்.15ம் தேதி சென்னை இருந்து இலங்கை செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக சென்னை - இலங்கை விமான டிக்கெட் ரூ.9,000 வரை கிடைத்தது. ஆனால் தற்போது அதே டிக்கெட் ரூ.43,000 வரை உயர்ந்துள்ளது. போட்டியை நேரில் காண ரசிகர்கள் அதிக அளவில் டிக்கெட் பதிவு செய்வதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிக்கெட் விலை அதிகரித்தாலும் ரசிகர்கள் இலங்கை செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். முக்கிய போட்டி என்பதால் விமான டிக்கெட் தேவை அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் போட்டி நெருங்கும் நிலையில் டிக்கெட் விலை இன்னும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
