4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி…!
மத்திய கிழக்கு பகுதியில் இரண்டு நாடுகளுக்கு இடையே தீவிர ராணுவ மோதல் வெடித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி தொடங்கிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த பகுதியில் பல நாடுகள் தங்கள் வான்வழிப் பரப்பை மூடியுள்ளன. இதனால் கடும் பதற்ற நிலை நிலவி வருகிறது.

இந்த நிலை இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளுக்கான வானூர்தி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி செல்ல இருந்த பல வானூர்திகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1,400 வானூர்திகள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய வெளியுறவுத்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1800118797 என்ற இலவச எண்ணிலும், பிற அவசர எண்களிலும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
