கள்ளக்காதலனுடன் உல்லாசம்... திடீரென மனைவி வந்ததால் 10வது மாடி பால்கனியில் குதித்து உயிர் தப்பிய பெண்!
சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஒரு ஆணுடன் தனிமையில் இருந்த கள்ளக்காதலி, எதிர்பாராத விதமாகக் கணவனின் மனைவி திடீரென வீட்டிற்குள் நுழைந்ததால் பீதியடைந்து, 10-வது மாடி பால்கனியில் இருந்து குதித்து உயிர் தப்பிய பரபரப்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தச் சம்பவம் நவம்பர் 30 அன்று நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டையில்லாத நிலையில் இருந்த அந்த ஆணுடன் ஒரு பெண்மணி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, அந்த ஆணின் மனைவி எதிர்பாராத விதமாக வீட்டிற்குத் திடீரென விரைந்து வந்துள்ளார். மனைவி உள்ளே நுழைந்ததும் பீதியடைந்த கணவர், மனைவிக்குத் தெரியாமல் இருக்க, அந்தப் பெண்மணியை பால்கனிக்கு ஏறி வெளியே தொங்கச் சொல்லியுள்ளார்.

உடனே அந்தப் பெண்மணி, அரை குறை ஆடையுடன் 10-வது மாடி பால்கனியில் இருந்து தொங்கியபடியே, அருகில் இருந்த பைப்பைப் பிடித்து பக்கத்து வீட்டின் ஜன்னல் வழியாக உதவி கேட்டுள்ளார். உள்ளே இருந்த நபர் ஒருவரின் உதவியால் அந்தப் பெண் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டார்.
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தைக் கண்ட பலரும், "அவர் ஸ்பைடர்மேன் குழுவைச் சேர்ந்தவர் போல இருக்கிறார்" என்றும், "ஒரு ஆணுக்காக இவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது" என்றும் பலவிதமான கிண்டலான மற்றும் கோபமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
