சொகுசு பங்களா... நடிகைகளுடன் உல்லாசம்.. போலீசாரிடம் சிக்கிய திருடன் பகீர் வாக்குமூலம்!

 
சாகுல் ஹமீது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர், விதைகள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 10ஆம் தேதி நள்ளிரவில் சுந்தர் கடையில் புகுந்து ரூ.4.70  லட்சத்தை கொள்ளையர்கள் திருடிச் திண்சென்றனர். இது குறித்த புகாரில் பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

இந்த கொள்ளை குறித்து துப்பு கிடைக்காததால், போலீசார் தமிழகம் முழுவதும் விசாரணையை விரிவுப்படுத்தினர். அதன்படி, திண்டுக்கல் அருகே ஒரு மர்ம நபரின் நடமாட்டம் உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் பொறிவைத்து விசாரணை நடத்திய போலீசாரிடம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் சிக்கினார்.

சாகுல் ஹமீது

அவரிடம் இருதுந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் சாகுல்ஹமீது மீது மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அதன்படி,  சாகுல்ஹமீதுக்கு மதுரையில் ஒரு மனைவியும், திருவனந்தபுரத்தில் ஒரு மனைவியும் என உள்ளனர். மருந்து விற்பனை பிரதிநிதியான சாகுல்ஹமீது இரவில் கொள்ளையடிப்பதை மற்றொரு தொழிலாக வைத்துள்ளார். சென்னை சென்ற அவர், அங்கிருந்து பண்ருட்டி சென்று உரம் மற்றும் பூச்சி மருந்து கடையில் திருடியிருக்கிறார்.

சாகுல் ஹமீது

திருடிய பணத்தில் ஒன்றrரை லட்சம் ரூபாய் மட்டுமே இருந்த நிலையில் மீதி பணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, திருடிய பணத்தில் கேரளாவில் சொகுசு விடுதியில் அரை எடுத்து தங்கி, நடிகைகளுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுதாக சாகுல் ஹமீது பதில் அளித்தார். அதில் பணம் செலவாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இவர் திருடிய பணத்தை நடிகைகளிடமே கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார். 60 வயதில் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க கொள்ளையைடித்த விவகாரம் போலீசாருக்கு அதிர்வை ஏற்படுத்தியது. பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web