"ஹோட்டலில் காதலனுடன் உல்லாசம்...." கணவன் நுழைந்ததால் ஜன்னல் வழியே குதித்த இளம்பெண்! வைரலாகும் வீடியோ!

 
girl

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், ஒரு பெண் தனது காதலனுடன் சொகுசு ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து, உல்லாசமாக இருந்த நிலையில், இது குறித்து தெரிந்த கணவன், உடனடியாக போலீசாரை அழைத்ததால், போலீசார் ஹோட்டலுக்குள் நுழைந்து, கதவைத் தட்டுவதை அறிந்த இளம்பெண், அறையின் ஜன்னல் வழியே எகிறி குதித்து, ஹோட்டலின் மேற்கூரையில் இருந்து 16 அடி உயரத்தில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களில் வீடியோவாக பதிவாகி வைரலாகி வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலம், பரோட் கோட்வாலி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், ஹாலிடே ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அந்த பெண் தனது காதலனுடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியை ரகசியமாக பின்தொடர்ந்தார். பின்னர், 112 என்ற எமர்ஜென்சி எண்ணை அழைத்து போலீசாரை அழைத்தார்.

போலீசார் ஹோட்டலுக்குள் நுழைந்ததும், பெண் பயந்துபோய் சுமார் 14-16 அடி வரையில் உயரமுள்ள ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பியுள்ளார். இந்த காட்சிகள் ஹோட்டலின் சிசிடிவி கேமிராக்களிலும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களாலும் பதிவுசெய்யப்பட்ட நிலையில் வைரலாகி வருகிறது.

girl jumping

வீடியோவில் ஹோட்டலின்  கூரை மீதிருந்து பின்பக்க வழியாக அந்தப் பெண் கீழே குதித்து ஓடி செல்வது தெளிவாகக் காணப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகம் அந்த நபர்களிடம் அடையாள அட்டை கேட்டதா? இல்லையா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலதிக விசாரணையில், சப்ரௌலி காவல் நிலையப் பகுதியில் வசித்து வந்த கணவன்-மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறுகள் நடைபெற்று வந்தன. திருமணத்திற்கு முன்பே பல ஆண்களுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. அந்த பகுதி மக்கள் மத்தியில் ஹோட்டலின் மீது கடும் கேள்விகள் எழுந்துள்ளன. அடையாளம் சரிபார்ப்பில்லாமல் அறை வழங்கப்பட்டதா என்பது தொடர்பாகும் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது