வயல்களில் இரைதேடி குவியும் பறவைகள் கூட்டம்... மதுபானக் கூடங்களில் சைட்டிஷ்க்காக வேட்டையாடப்படும் கொடூரம்!
வடகிழக்கு பருவமழையின் அருள் பொழிவால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் வயல்வெளிகள் நீரில் குளித்துக் கிடக்கின்றன. இதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மட்டுமல்ல… வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு இனப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வேளாங்கண்ணி அருகே திரண்டு உள்ளன. நீர்த்தேங்கிய வயல்களில் கொக்கு, மடையான், நாரை, குருவி, குயில் போன்றவை சுதந்திரமாக பறந்து இறங்கி இரை தேடும் மயக்கும் காட்சிகள் பொதுமக்களை கவர்ந்து வருகின்றன.
இந்த இயற்கை அரங்கத்தை பின்னணியாகக் கொண்டு சிலர் மறைமுகமாக கொக்கு, மடையான், நாரை மற்றும் குயில் போன்ற பறவைகளை வலை விரித்து பிடித்து வேட்டையாடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி பறவைகளை பிடிப்பதும், வேட்டையாடுவதும் கடுமையான குற்றம் என்பதையும் அவர்கள் நினைவூட்டுகின்றனர்.
இருப்பினும், இந்தப் பறவைகள் ஜோடிகள் ரூ.200 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கூடங்களில் சைடிஷாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. பருவமழை காலத்தில் காட்சியளிக்கும் இந்த அழகிய பறவைகளை காப்பாற்ற வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
