5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... பாதுகாப்பா இருங்க மக்களே... !

 
வைகை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும்  தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில்  தொடர் கனமழை பெய்து வருகிறது.  இதனையடுத்து தேனி மாவட்டத்தில்  வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து அதன்  முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  இதனால் அணைக்கு வரும் உபரி நீர் வினாடிக்கு 3100 கன அடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இன்று முதல் பாசனத்திற்கு வைகை அணை திறப்பு


இதனால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்திலேயே வடகிழக்கு பருவமழை நிறைவடைந்து விடும். நடப்பாண்டில்  ஜனவரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வைகை, முல்லைப்பெரியாறு, மஞ்சளாறு, சோத்துப்பாறை ஆகிய அணைகளின் நீர் நிலவரம்


அதன்படி, நீலகிரி, கோவை,  திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை. விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web