பத்திரமா இருங்க... ஒலிப்பெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அணைக்கட்டின் பாதுகாப்பு கருதி பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் முழு கொள்ளளவான 32.8 டிஎம்சியில் 11.6 டிஎம்சி நீர் நிறைந்துள்ளதால் அணையில் இருந்து 105 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனையடுத்து பவானி ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 16,140 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் அதிகப்படியாக வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை 26 பேர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
