மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை!

 
மணிமுத்தாறு அருவி
 

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் தொடர் மழை பெய்தது. நெல்லையில் மிதமான மழை நீடித்தது.

மணிமுத்தாறு

இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

நெல்லை மணிமுத்தாறு அருவி

அருவியில் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மன்னார் வளைகுடா பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதனால் மழை நிலவரத்தில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!