சென்னை, புறநகர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய வெள்ளம்... அகற்றும் பணி தீவிரம்!

 
வெள்ளம் ஆட்டோ கனமழை மழை

சென்னையில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, பல்வேறு குடியிருப்புப் பகுதிகளையும், சாலைகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றவும், தேங்கிய மழைநீரை அகற்றவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

'டித்வா' புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையால், சென்னை நகரின் பல இடங்களில் வெள்ளம் குளம்போல் தேங்கியது. வடசென்னைப் பகுதிகள்: வியாசர்பாடி, ஓட்டேரி, கொளத்தூர், வண்ணாரப்பேட்டை, வேப்பேரி, மத்திய, தென் சென்னைப் பகுதிகள்: கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை முல்லை நகர், அம்பத்தூர் சிடிஎச் சாலை, பெருங்குடி கொட்டிவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.

உத்தரப் பிரதேச மழை

பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தேங்கிய மழைநீரை அகற்றுவதற்காக மாநகராட்சியினர் மின்மோட்டார் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் உதவியுடன் பணிகளை விரைவுபடுத்தினர். மாநகராட்சிப் பராமரிப்பில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில், கணேஷபுரம் சுரங்கப் பாதையில் மட்டும் 4 அடிக்கு மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டது. மின்மோட்டார் மூலம் நீர் அகற்றப்பட்டு, பிற்பகலில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் பகுதியில், தண்டவாளத்தில் தேங்கியிருந்த மழைநீர் மின்மோட்டார் மூலம் அகற்றப்பட்டது.

குடிமக்களின் சிரமத்தைக் குறைக்க மாநகராட்சி நிர்வாகம் நிவாரணப் பணிகளையும் மேற்கொண்டது: தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் சுமார் 2.74 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு விநியோகிக்கப்பட்டது. வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டல அலுவலகங்களில் இலவச மழைக்காலச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.

கனமழை பெங்களூரு வெள்ளம் வீட்டிற்குள்

சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மெரீனா கடற்கரை, 'நீலக்கொடி' கடற்கரையாக (Blue Flag Beach) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் இந்தக் கடற்கரைப் பகுதியிலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கி, நீச்சல் குளம்போலக் காட்சியளிக்கிறது. இதையும் மின்மோட்டார் மூலம் அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடற்கரையோரமுள்ள பட்டினம்பாக்கம் மீன் அங்காடி அருகேயுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!