ரேஷன் கடைகளில் பறக்கும் படை ஆய்வு... விற்பனையாளர்களுக்கு ரூ.12,600 அபராதம்!

 
ரேஷன்

 

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு நியாயவிலை கடைகளில் இணைப்பதிவாளர் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு நடத்தினர். 

ரேஷன்

தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையில், துணைப் பதிவாளர்கள் மற்றும் 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள், மற்றும் 7 முதுநிலை ஆய்வாளர்கள், உள்ளிட்ட 24 கூட்டுறவு துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பறக்கும் படை ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று திருவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டாரங்களில் உள்ள 63 கூட்டுறவுத்துறை நியாயவிலை கடைகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டது. 

ரேஷன்

இதில் மேற்படி நியாயவிலைக் கடைகளில் இருப்பு குறைவு மற்றும் இருப்பு அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்புடைய நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு இருப்பு குறைவிற்காக ரூ.11,100/-அபராதமாக விதிக்கப்பட்டது. இதே போல் கூடுதலாக கண்டறியப்பட்ட பொருட்களுக்காக ரூ.1,500 அபராதம் என மொத்தம் ரூ.12600 அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.12600 அபராதம் விதிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web