ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!! பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி!!

 
ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. பெற்றோர்கள் குடும்பம், குடும்பமாக சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதுகின்றன . ஆசிரியர்களுக்கும் மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மே மாத இறுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஈடுபட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும்  பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் முதல் 2 வாரத்திலும், மே இறுதி வாரத்திலும் நடைபெற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணியில்  தமிழகத்தின் அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவதை உறுதி செய்ய  வேண்டும் என கூடுதல் மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.  அதே போல் தொடக்கத்திலேயே  தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கி பள்ளிக்கு வருகை தரச் செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்களிடம் பயிலும் அனைத்து குழந்தைகளின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழை  பெற்று வைத்து இருத்தல் வேண்டும். அதே நேரத்தில்  ஆதார் அட்டை, பிறப்பு சான்று இல்லாத காரணத்தால் குழந்தைகளுக்கு சேர்க்கை மறுக்கக்கூடாது. குழந்தைகளை பள்ளியில் சேர்த்த பின் குறிப்பிட்ட ஆவணங்களை பெற்று தர வழிமுறைகளை கூறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web