சூப்பர்... விரைவில் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை !
Feb 19, 2025, 08:56 IST

சென்னையின் பொதுப்போக்குவரத்து சேவைகளில் முக்கியமானது மின்சார ரயில்களும் , புறநகர் ரயில் சேவைகளும் தான். நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வேளச்சேரி-பரங்கிமலை இடையே ஜூன் மாதம் முதல் பறக்கும் ரயில் சேவையை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2008ல் ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.
ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் திட்டம் தாமதமானது. நீதிமன்றம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டதை அடுத்து பறக்கும் ரயில் பாலப் பணிகள் 70% நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக ஜூன் மாதம் முதல் ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web