சென்னை உட்பட 14 மாவட்டங்களில் பனிமூட்டம் நீடிக்கும்.. மக்களே உஷார்!

 
பனிமூட்டம் பனிப்பொழிவு ரயில்

தமிழ்நாட்டில் அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். வடகிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிகளவிலான பனிமூட்டம் வரும் பிப்ரவரி 13-ம் தேதி வரை தொடர்ந்து இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் காலை நேரங்களில் ரயில், விமானம், சாலை போக்குவரத்து சவாலான விஷயமாக இருக்கிறது. நேற்று அதிகளவிலான பனிமூட்டம் காரணமாக சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக வந்தன. சென்னை விமான நிலையத்தில் சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. 

பனிமூட்டம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகமாகக் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் அதிகாலை வேளைகளில் வழக்கத்திற்கு விடை மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பனிமூட்டம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை நேரத்தில் இதயமான பனிமூட்டம் மற்றும் மேகமூட்டம் காணப்படும் போது, பொதுமக்கள் மற்றும் பயணிகள் அறிவுறுத்தப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதும் வானிலை கூறியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!