பொங்கல் விடுமுறை முடியும் வரை பனிமூட்டம் தொடரும்!
தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சில பகுதிகளில் வானிலையில் மாற்றம் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலையே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 14, 15 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளான தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை வேளைகளில் சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும்.

ஜனவரி 16 முதல் 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
