மக்களே... உஷார்!! கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிக்குது... ஒரிஜினிலை கண்டுபிடிக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி!

நாடு முழுவதும் சமீப காலங்களாக கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கள்ள நோட்டுக்களை ஒழிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை ஒழிக்கவும், கருப்பு பணத்தையும், பதுக்கல்களையும் ஒழிக்கவும் ரூ.500 ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கையில் புழங்கிக் கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது.
சமீபத்தில் கூட ரூ 200 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் போலி ரூ 200 நோட்டுக்களை அடையாளம் காண ரிசர்வ் வங்கி சில முக்கியமான குறிப்புகளை வெளியிட்டுள்ளது . இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி போலி ரூபாய் நோட்டுக்களை யார் வேண்டுமானாலும் எளிதில் அடையாளம் காணலாம்.
அதன்படி ரூபாய் நோட்டின் இடது பக்கத்தில் தேவநாகரி எழுத்தில் 200 என்ற எண் எழுதப்பட்டிருக்கும். அந்த நோட்டின் மையத்தில் மகாத்மா காந்தியின் தெளிவான படம் இருக்கும்.
RBI, Bharat, INDIA மற்றும் 200 ஆகிய எழுத்துக்கள் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம் இடம் பெற்று இருக்கும். இந்த அம்சங்களை சரி பார்ப்பதன் மூலம் நீங்கள் போலி மற்றும் உண்மையான நோட்டுக்களை எளிதில் வேறுபடுத்தி கண்டுபிடித்து விடலாம் எனத் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!