குழப்பத்தில் தொண்டர்கள்... அமித்ஷாவிற்கு பதில் இயக்குநர் சந்தான பாரதியின் புகைப்படத்துடன் போஸ்டர்!

 
 போஸ்டர்

தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் 56 வது ஆண்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

அமித்ஷா

இதனிடையே, ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கும் அமித்ஷாவை வரவேற்பதற்காக மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பா.ஜ.க. சார்பில் அமித்ஷாவை வரவேற்கும் வகையில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வைரலாகி வருகின்றன.  இந்நிலையில், அமித்ஷாவை வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டரில் அமித்ஷாவிற்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது. 

அமித்ஷா

பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரின் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக அதே போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பா.ஜ.க.வினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட பெண் நிர்வாகி இதனை மறுத்து விட்டதாகவும்  இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்க இருப்பதாகவும்   தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web