உணவு டெலிவரி ஊழியர் கார் ஏற்றிக் கொலை... பகீர் வீடியோ!

 
டெலிவரி
 

பெங்களூரு ஜே.பி. நகர் பகுதியில் கடந்த அக்டோபர் 25-ம் தேதி இரவு, உணவு டெலிவரி செய்து கொண்டிருந்த தர்ஷன் (24) என்பவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் ஓட்டிய இருசக்கர வாகனம், மனோஜ் குமார் என்பவரின் காரின் கண்ணாடியில் லேசாக உரசியது. இதற்காக தர்ஷன் மன்னிப்பு கேட்டபோதும், ஆத்திரமடைந்த மனோஜ் மற்றும் அவரது மனைவி ஆரத்தி சர்மா, தர்ஷனை காரில் பின்தொடர்ந்து சென்று மோதியுள்ளனர்.

இந்த கொடூர மோதலில் தர்ஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் இதை விபத்து என பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

விபத்துக்குப் பிறகு சில நிமிடங்களில், தம்பதியினர் முகக்கவசம் அணிந்து மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்து, சிதறிய கார் பாகங்களை மறைக்க முயன்றதும் பதிவாகியுள்ளது. இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த களரிப்பயிற்று பயிற்சியாளரான மனோஜ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். சாலையில் ஏற்படும் சிறு கோபமே உயிரைப் பறிக்கும் அளவுக்கு மாறும் அபாயத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!