உணவு திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிப்பு!! தினம் குவியும் சுற்றுலாப் பயணிகள்!!

தமிழகத்தில் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் சென்னையில் வருடந்தோறூம் சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும் சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவு திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஏப்ரல் 28ம் தேதி தீவுத் திடலில் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.
இன்று மே 15ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மே 21ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.இந்த திருவிழாவில் இந்தியா முழுவதிலும் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்தும் கைவினை கலைஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர். அத்துடன் பூடான், நைஜீரியா, வங்கதேசம், ஈரான், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கைவினை பொருட்களும் இடம் பெற்றுள்ளன .
மொத்தம் 80 அரங்குகள் இந்த திடலில் அமைக்கப்பட்டுள்ளன. கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் உணவு திருவிழாவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் ரூ.10 . தினமும் கூட்டம் அலைமோதுவதாலும், பள்ளிகளில் கோடை விடுமுறை தொடர்வதாலும், தினசரி பார்வையிடும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மே 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!