ஒரே இடத்தில் குவிந்த 'புட் லவ்வர்ஸ்'... உணவுத்திருவிழா 28ம் தேதி வரை நீட்டிப்பு!

 
உணவு

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் 'மதி' உணவுத் திருவிழாவிற்கு கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பை அடுத்து, வரும் 28-ம் தேதி வரை திருவிழா நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியர்களே.. உடனே கிளம்புங்க!

மதுரை மற்றும் சென்னையில் ஏற்கனவே ஹிட் அடித்த இந்த உணவுத் திருவிழாவை, கடந்த 21-ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெசன்ட் நகரில் தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம்.

உணவுத் திருவிழா

ஒரே இடத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தின் சுவையையும் கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம். இதில் மொத்தம் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன: ஆம்பூர் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாணி, ஆற்காடு பிரியாணி என விதவிதமான மணங்கள் ஆளைத் தூக்குகின்றன.

மதுரை கறி தோசை, சேலம் தட்டு வடை செட், விருதுநகர் புரோட்டா, காரைக்குடி செட்டிநாடு தின்பண்டங்கள் என 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயார்! நீலகிரி கோத்தர் உணவு, திருநெல்வேலி நரிப்பயிறு பால், கடலூர் மீன் புட்டு என அரிய வகை உணவுகளும் இங்கே அணிவகுக்கின்றன.

பிரியாணி

உணவு மட்டுமல்லாது, காஞ்சிபுரம் முட்டை மிட்டாய் முதல் 90-களில் புகழ்பெற்ற 30 வகையான திருவள்ளூர் தின்பண்டங்கள் வரை 12 அரங்குகளில் விற்பனை செய்யப்படுகின்றன. கன்னியாகுமரி சிப்ஸ், நீலகிரி தேநீர் என ஷாப்பிங் செய்யவும் சூப்பர் வாய்ப்பு. அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர் விடுமுறை வருவதாலும், சென்னை மக்களின் அபரிமிதமான கூட்டத்தினாலும் இந்தத் திருவிழா வரும் டிசம்பர் 28-ம் தேதி (ஞாயிறு) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

"வெறும் சாப்பாடு மட்டும் இல்லீங்க.. மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஹைஜீன் முறைகள் மற்றும் மார்க்கெட்டிங் பயிற்சிகளும் அங்கேயே வழங்கப்படுதாம். சுவையோடு சேர்த்து சமூகப் பொறுப்பும் சூப்பர்!"

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!