அடி தூள்!! மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!! பயணிகள் உற்சாகம்!!

 
மெட்ரோ ரயில்

சென்னையில்  போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எந்தப் பகுதிக்கும் செல்ல  மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ சேவைகள் அதிகாலை தொடங்கி இரவு 11மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் இதற்கான கட்டண சேவை அதிகமாக இருப்பதால் பலர் பயன்படுத்த தயங்கினர். ஆனால் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல், பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிப்பு காரணமாக மெட்ரோ ரயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

மெட்ரோ ரயில்

தொடக்கத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு சேவை என இருந்து வந்தது தற்போது 3 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்படும் முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகள், பயன்பாடுகளை பொறுத்து கூடுதல் ரயில்களை இயக்கவும், மேலும் வசதிகளை அதிகப்படுத்தவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் மார்ச் 19ம் தேதி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது.

மெட்ரோ ரயில்

இந்த நிகழ்ச்சி  இரவு 7மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை விடுமுறை தினமாக இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை முழுவதிலும் இருந்து பலர் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களின் தேவைகளின் அடிப்படையில்  மெட்ரோ ரயில் சேவை செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி வழக்கமாக 11 மணிவரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, 19ந்தேதி மட்டும் இரவு 12 மணி வரை  இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web