அடி தூள்!! தமிழகத்தில் முதல் முறையாக குற்றவாளியை சுட்டு பிடித்த பெண் உதவி ஆய்வாளர்!!

 
மீனா

பிப்ரவரி 20ம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்னை அயனாவரத்தில்  காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென  உதவி ஆய்வாளரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு சென்றது.இச்சம்பவம் குறித்து   வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

மீனா

அந்த ஆய்வில்  கௌதம் என்ற இளைஞர் பைக்கை ஓட்டி வந்ததும் அவருடைய நண்பர்கள் சூர்யா, அஜித் இருவரும் பின்னால் அமர்ந்து வந்ததும் பதிவாகி இருந்தது. அதில் சூர்யா  காவல் உதவி ஆய்வாளர் சங்கரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் உறுதி செய்யப்பட்டது.  இதில்  பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில்  செயல்பட்ட குழு  கௌதம் மற்றும் அஜித்  இருவரையும் நேற்று காலை கைது செய்தது. இது அறிந்த அவரது நண்பர் சூர்யா தலைமறைவானார். அவரை பிடிக்க  தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அந்த விசாரணையின் படி  சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் அவரது அக்கா புஷ்பா வீட்டில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில்  4 பேர் கொண்ட தனிப்படை  திருவள்ளூர் விரைந்தது. அங்கு தனது சகோதரி வீட்டில் பதுங்கியிருந்த சூர்யாவை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

போலீஸ்

சிறிது தூரம் சென்றதும் சூர்யா இயற்கை உபாதையை கழிக்க கேட்டுள்ளார். அதனால்  வாகனத்தை போலீஸார் ஓரமாக நிறுத்தினர். சிறுநீர் கழிக்க ஒதுக்குப்புறமாக சென்ற போது சூர்யா தப்பி ஓடினார். தலைமைக் காவலர்  உடனே சூர்யாவை துரத்தி சென்றார். கரும்பு ஜூஸ் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்களை  சூர்யா தாக்கத் தொடங்கினார். இதில் காவலர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். உதவி ஆய்வாளர் மீனா உடனே தற்காப்புக்காக  கையில் வைத்திருந்த துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தினார். குற்றவாளியின் காலில் சுட்டதில் சூர்யா கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  சூர்யாவை பிடித்து  மருத்துவமனையில் சேர்த்தார். அதே நேரத்தில் படுகாயமடைந்த இரு காவலர்களையும்  அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரனையில் சூர்யா மீது  ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, செல்போன் மற்றும் தங்க நகை பறிப்பு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை மடக்கி பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மீனாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்துவ் வருகின்றன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web