வாட்ஸ்-அப்ல அசத்தலான அப்டேட்.. இனி ஷெட்டியூல் பண்ணலாம்.. நோட்ஸ் எடுக்கலாம்.. புதிய அம்சங்கள்!

 
வாட்ஸ் அப்

தகவல் பரிமாற்ற செயலிகளில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள செயலிகளில் முதன்மையாக இருப்பது வாட்ஸ் அப் தான்.  வாட்ஸ் அப் செயலியை தொழில்நுட்ப அடிப்படையில் மேம்படுத்தவும், பயனர்களின் வசதிக்காகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 2  புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் மட்டுமல்ல அழைப்புக்கள், படங்கள் , வீடியோக்கள், லிங்க்களை ஷேர் செய்ய முடியும். இதனை மேலும் மேம்படுத்தும் வகையில்  ஒரிஜனல் பிக்சல் தரத்தில் படங்களைப் ஷேர் செய்யும் அம்சமும் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் வாட்ஸ்அப் கால்களை செட்டியூல்  செய்யவும் முடியும். அதன்படி நாம் அனுப்பும் மெசேஜ்கள், அழைப்புக்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ஷெட்டியூல் செய்து கொள்ளலாம்.  வாய்ஸ் மெசேஜ்களை எழுத்துக்களாகவும் மாற்றிக் கொள்ளலாம். 

வாட்ஸ் அப்


இது குறித்த தகவல்கள் அனைத்தும் WaBetaInfo தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.  வாட்ஸ் அப் மூலம் ஒருவருக்கு கால் செய்யும் போது, ஒரு அட்டவணை ஆப்ஷன் காட்டப்படும். அதை கிளிக் செய்தால், எப்போது கால் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதில் தலைப்பு, தேதி மற்றும் நேரம் ஆப்ஷன்களை பயன்படுத்தி கால் செய்யும் தகவல்களை குறித்து கொள்ளலாம். 

வாட்ஸ் அப்
இந்த கால் செட்டியூல்  மூலம் அலுவலக பணியாளர்கள் தங்களது பணிகளை திட்டமிட்டு கொள்ளலாம். மீட்டிங்கில் இருப்பவர்களுக்கு வாட்ஸ்அப்  ரிமைன்டரை அனுப்பி விடும்.  அதே போல் அழைப்புக்கள் தொடங்கும் போது பயனர்களுக்கு அறிவிக்கப்படும். பணி நிமித்தமாக மறந்து விடுபவர்களுக்கும் இதுவே நினைவூட்டலையும் அனுப்பிவிடும். 
அதே போல் தற்போது வாய்ஸ் மெசேஜ்களாக அனுப்பி வருகிறோம். நாம் கூறியதை அப்படியே எழுத்துக்களாக மாற்றி படிக்க முடியும். ஆனால், இந்த அம்சம் ஆங்கிலத்தில் மட்டுமே முதலில் அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.  மற்ற மொழிகளில் வாய்ஸ் மெசேஜ் வந்தால் அது வேலை செய்யாது.  இந்த புதிய அம்சங்கள்  அனைத்தும்  தற்போது சோதனை முயற்சியில்  பரிசோதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ் அப் பயனர்களிடையே  இத்தகவல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web