அசத்தல்... இந்தியாவிலேயே முதன்முறையாக வணிக வளாகதிற்குள் செல்லும் சென்னை மெட்ரோ ரயில்!

 
மெட்ரோ
 


 

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்  போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்  மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வரும் நிலையில்  மெட்ரோ ரயிலில், பயணம் செய்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரயில் விமான நிலையம் - விம்கோ நகா், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்பட்டு வருகிறது.  மேலும், 3 வழித்தடங்களில் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, ஜூன் 29ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.

மெட்ரோ

இந்நிலையில், சென்னை திருமங்கலத்தில் மெட்ரோ நிலையத்துடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது. வணிக வளாகம் உள்ளே சென்று வெளியே வரும் வகையில் மெட்ரோ ரயிலை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 9 மாடிகளை கொண்ட 3 கட்டடங்கள் கட்டப்படுகிறது. கட்டடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு, விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.

மெட்ரோ

இங்கு பல்வேறு அலுவலகங்கள், கடைகள் மற்றும் 3 நிலைகளில் சுரங்க வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்ற இந்தியாவிலேயே  முதன் முறையாக சென்னை திருமங்கலத்தில் அமையவுள்ளது. திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டடத்தின் மாதிரிப்படம் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது