இந்திய வரலாற்றில் முதன்முறையாக பிரதமரின் பாதுகாப்பு பணியில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்பு!

 
பெண் காவலர் மோடி

இன்று சர்வதேச மகளிர் தினத்தை உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் கலந்துக் கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு முழுவதுமாக பாதுகாப்புப் பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் நவ்சரி மாவட்டத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துக் கொள்ள இருக்கிறார்.

பெண் காவலர் மோடி

அங்கு கூடியிருக்கும் பெண்கள் மத்தியில் உரையாற்றவிருக்கிறார். குஜராத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளில் முழுவதுமாக காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  பிரதமர் மோடி வருகை முதல் அவர் கலந்துக் கொள்ளும் விழா நிறைவுபெறும் வரை பெண் காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தகவல் தெரிவித்துள்ளார்.  

பெண் காவலர் மோடி

இது குறித்து அவர் கூறுகையில், 'உலக மகளிர் நாளையொட்டி, இந்தியாவிலேயே முதல்முறையாக குஜராத் காவல்துறை ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கிறது. அதன்படி பிரதமர் மோடி கலந்துக் கொள்ளும் விழாவுக்கு முழுவதுமாக பெண் அடங்கிய குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளது. அதன்படி 2,100க்கும் மேற்பட்ட காவலர்கள், 187 உதவி ஆய்வாளர்கள், 61 ஆய்வாளர்கள், 16 டிஎஸ்பி, 5 எஸ்பிக்கள், ஒரு ஐ.ஜி., ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி என அனைவருமே பெண்கள்" என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web