இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறை... உளவுப் பிரிவின் தலைவராக பெண் நியமனம்!

 
உளவுப் பிரிவின் தலைவராக பெண்


116 ஆண்டுகால வரலாற்றில் இங்கிலாந்தில் உளவுப்பிரிவுக்கு முதன்முறையாக  தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். 

இங்கிலாந்தில் உளவுப்பிரிவு

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இங்கிலாந்துக்கு அதிகளவில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனை கண்காணிக்க நாட்டின் உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்தில் எம்-16 என்ற உளவுப்பிரிவு தலைவராக பிளேஸ் மெட்ரெவேலி நியமிக்கப்பட்டு உள்ளார். 

இங்கிலாந்தில் உளவுப்பிரிவு

முக்கியத்துவம் வாய்ந்த இந்த உளவுப்பிரிவுக்கு 116 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை ஆகும். நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து வெளியுறவுத்துறை மந்திரியிடம் பிளேஸ் மெட்ரெவேலி நேரடியாக அறிக்கை சமர்ப்பிப்பார். லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் 1999-ம் ஆண்டு புலனாய்வுத்துறை அதிகாரியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது