பயணிகளின் கனிவான கவனத்திற்கு... 18 மின்சார ரயில்கள் ரத்து!

 
பறக்கும் ரயில்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பொதுப்போக்குவரத்து சேவையை பொறுத்தவரை புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரயில்கள் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று மார்ச்10ம் தேதி சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த 2 நாட்களிலும் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ” சென்ட்டிரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்டிரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்டிரலில் இருந்து காலை 10.15 பிற்பகல் 12.10, 1.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து காலை 11.45 பிற்பகல் 1.15 மாலை 3.10, இரவு 9 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. 

மின்சார ரயில்

கடற்கரையில் இருந்து காலை 9.40 பிற்பகல் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.50, பிற்பகல் 2.30, மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

மின்சார ரயில்

 செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும் கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும். சிறப்பு மின்சார ரயில்கள் இதன் காரணமாக அந்த 2 நாட்களிலும் காலை 10.30 மணிக்கு சென்டிரல்- பொன்னேரிக்கும், பிற்பகல் 1.18, மாலை 3.33 மணிக்கு பொன்னேரி - சென்டிரலுக்கும், காலை 11.35 மணிக்கு சென்டிரல்- மீஞ்சூருக்கும், பிற்பகல் 2.59 மணிக்கு மீஞ்சூர் - சென்டிரலுக்கும், பிற்பகல் 12.40 மணிக்கு கடற்கரை - பொன்னேரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web