இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொருளாதாரம் உயரும்.. நிலுவையிலுள்ள சிக்கல்கள் தீரும்!
இன்று சந்திரன் மற்றும் கிரகங்களின் நிலையைப் பொறுத்து 12 ராசிகளுக்கான பொதுவான பலன்களைப் பார்க்கலாம் வாங்க.
மேஷம்: இன்று உற்சாகமான நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.
ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை.
மிதுனம்: புதிய முயற்சிகள் கைகூடும். தொழில் ரீதியான பயணங்கள் சாதகமாக அமையும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.
கடகம்: வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிடப்படும். அரசு வழியில் லாபம் உண்டு.
கன்னி: பொருளாதார நிலை உயரும். நிலுவையில் இருந்த சிக்கல்கள் தீரும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும்.
விருச்சிகம்: தைரியமாகச் சில முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் தெரியும்.

தனுசு: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பழைய கடன்கள் வசூலாகும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புண்டு.
மகரம்: வேலையில் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும். திட்டமிட்டுச் செயல்படுவது வெற்றி தரும்.
கும்பம்: மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். கூட்டுத் தொழிலில் லாபம் பெருகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும்.
மீனம்: எதிர்ப்புகள் விலகும். உடல் நலம் சீராகும். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
