கூகுள் மேப்பை நம்பி நள்ளிரவில் கதறிய வெளிநாட்டுப் பயணி! தேவதையாய் வந்த 'ரேபிடோ' டிரைவர் - வைரலாகும் வீடியோ!
"அதிதி தேவோ பவ" (விருந்தினரே தெய்வம்) என்ற இந்தியப் பண்பாட்டிற்குச் சான்றாக கோவாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. திசை தெரியாமல் அழுது கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணிற்கு, ஒரு பெண் 'ரேபிடோ' ஓட்டுநர் செய்த உதவி தற்போது இணையத்தில் 'தீயாய்' பரவி வருகிறது.
கோவாவிற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், தனது விடுதிக்குச் செல்ல கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். ஆனால், மேப் காட்டிய வழி அவரை ஒரு ஆள் அரவமற்ற, இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டது. மொழி தெரியாத ஊரில், நள்ளிரவு நேரத்தில் தவறான இடத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்த அந்தப் பெண், மிகுந்த பயத்துடன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற 'ரெபிடோ' பெண் ஓட்டுநர், அழுது கொண்டிருந்த சுற்றுலாப் பயணியைப் பார்த்துத் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அந்தப் பெண்ணின் நிலையைக் கேட்டறிந்த அவர், உடனடியாக அவரைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.
Goa foreigner | Google Map | கூகுள் மேப்பால் கண்ணீர்விட்ட வெளிநாட்டு பெண் | பெண் ரேபிடோ ஓட்டுநர் செய்த செயல் | தீயாய் பரவும் வீடியோ #goa #foreigner #googlemap #thanthitv pic.twitter.com/MijnmQLRgY
— Thanthi TV (@ThanthiTV) January 13, 2026
சுமார் அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அந்தப் பெண் தங்கியிருந்த விடுதியில் அவரைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டார் அந்த பெண் டிரைவர். பாதுகாப்பான இடத்திற்கு வந்த நிம்மதியில், அந்த வெளிநாட்டுப் பயணி உதவி செய்த பெண் டிரைவரைக் கட்டியணைத்து, விம்மி விம்மி அழுது தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த உருக்கமான காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, இப்போது அந்த பெண் டிரைவர் இந்தியாவின் 'ரியல் ஹீரோவாக' கொண்டாடப்பட்டு வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
