அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் காலமானார்!
Jun 9, 2025, 10:35 IST
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த 2016ல் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார் குணசேகரன்.

திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், அதிமுக மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன், கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில், கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு அதிமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குணசேகரன் மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
