அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் இன்று காலை காலமானார். தொண்டர்கள், கட்சியினர் இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1970ல் நெல்லை மாவட்டம் ஆலங்குளம், 1980ல் நெல்லை பாளையம்கோட்டை ஆகிய தொகுதிகளில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பொறுப்பேற்றவர் கருப்பசாமி பாண்டியன். அதன் பின்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து 2000ல் தென்காசி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றிருந்தார்
பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு பிறகு கடந்த 2020ல் மீண்டும் திமுகவில் இருந்து வெளியேறி, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதிமுக மாவட்ட கட்சி பொறுப்புகளில் முக்கிய அங்கம் வகித்து வந்த கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை நெல்லையில் உயிரிழந்துள்ளார். மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியனின் மறைவு அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!