ஒரே நாளில் இரட்டை அதிர்ச்சி… அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைப்பு!

 
அதிமுக

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒரே நாளில் அதிமுகவைச் சேர்ந்த இரண்டு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, பழனி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினமும், சிவகாசி முன்னாள் எம்எல்ஏ பாலகங்காதரனும் திமுகவில் இணைந்தனர்.

சுப்புரத்தினம், 1991–96 காலகட்டத்தில் பழனி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட போது ஓபிஎஸ் அணியில் சேர்ந்தார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்த அவர், தற்போது திமுகவுக்கு மாறியுள்ளார். பாலகங்காதரன் சிவகாசி தொகுதி முன்னாள் எம்எல்ஏ. இருவரின் இணைப்பு அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சித் தாவல்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டுகளில் பல முன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் திமுக மற்றும் தவெகவில் இணைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பிறகு அரசியல் நகர்வுகள் மேலும் வேகமெடுக்கும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் வரையிலான நாட்களில் இன்னும் பல மாற்றங்கள் நிகழலாம் என்றே அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!