வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதாவுக்குத் தீவிர சிகிச்சை... மருத்துவமனையில் அனுமதி!
வங்கதேசத்தில் மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்த மூத்த அரசியல் தலைவரான கலீதா ஜியா (வயது 80), உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த கலீதா ஜியா, கடந்த நவம்பர் 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளில் ஏற்பட்ட தொற்றுகளின் காரணமாக, அவர் உடனடியாகத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார். அவருக்கு வங்கதேசம் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் அடங்கிய ஒரு சிறப்பு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

ஏற்கெனவே, நீரிழிவு நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கலீதா ஜியா உடல்நலம் பெற வேண்டி, அவரது ஆதரவாளர்களும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தொண்டர்களும் இன்று (நவம்பர் 28) சிறப்புப் பிரார்த்தனைகள் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வங்கதேசத்தின் அரசியலில் முன்னணி கட்சியாக உருவெடுத்துள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரான கலீதா ஜியா, மறைந்த முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமானின் மனைவி ஆவார். அவரது உடல்நிலை குறித்த செய்திகள், வங்கதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
