பரபரப்பு வீடியோ... முன்னாள் முதல்வர் கார் ஏறி தொண்டர் பலி...!

 
ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி வாகனப்பேரணியில் ஈடுபட்டிருந்த போது தொண்டர் ஒருவர் அவரது கார் சக்கரத்தில் சிக்கி பலியானது பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர்  குண்டூர் மாவட்டத்தில் வாகன பேரணியில் ஈடுபட்டிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி காரில் வந்து கொண்டிருந்த போது  அவரது பின்னால் வாகனங்கள் அணிவகுத்து வந்தது.அதே நேரத்தில் 54 வயதான சீலி சிங்கையா என்ற நபர் ஜகன்மோகன் ரெட்டியின் வாகனம் மோதி உயிரிழந்தார்.

Shocking Visuals: Ex-Chief Minister of Andhra Pradesh Jagan Reddys car runs over bystander in rally.
https://t.co/tXDzLJDwte

— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 22, 2025

அதாவது அவர் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மலர் தூவுவதற்காக சென்றபோது திடீரென  கீழே விழுந்த நிலையில் அவரது மீது ஜெகன்மோகன் ரெட்டியின் காரின் சக்கரங்கள் ஏறி இறங்கியது.அதே இடத்தில் முதியவர் துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.  

ஜெகன்மோகன் ரெட்டி

30 முதல் 35 வாகனங்கள் வாகன பேரணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி காரில் இருந்து கையசைக்கும் நிலையில் அதே காரின் சக்கரத்தின் அடியில் அந்த முதியவர் சிக்கி உயிரிழந்த வீடியோவும் சமூக வலைதளங்களில்  வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில்  ஜெகன்மோகன் ரெட்டிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது