பரபரக்கும் அரசியல் வட்டாரம்... முன்னாள் காங்கிரஸ் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை!

 
சஜ்ஜன் குமார்


 
1984 ல் சீக்கியா்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடா்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 2வது  வழக்கில் குற்றவாளியாக கடந்த 2 வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


1984, அக்டோபா் 31ம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க்காவலா்களால்  சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லி உட்பட  பல்வேறு இடங்களில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் ஏராளமானோா் படுகொலை செய்யப்பட்டனர்.  
தில்லியில் நடந்த கலவரம் குறித்து  சஜ்ஜன் குமாா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாலம் காலனி பகுதியில் 5 சீக்கியா்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயா்நீதிமன்றம் 2018ல் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. இத்தண்டனைக்கு எதிரான இவரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.  இந்நிலையில், சரஸ்வதி விஹாரில் ஜஸ்வந்த் சிங், அவரது மகன் தருண்தீப் சிங் ஆகியோா் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் பிப்ரவரி 12ம் தேதி தீர்ப்பு வழங்கியது.


இதனைத் தொடர்ந்து, அவருக்கான தண்டனை குறித்த விசாரணை, பிப்ரவரி 18ம் தேதி நடைபெற்றது. அரசுத் தரப்பிலும் சஜ்ஜன் குமார் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி  டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web