முன்னாள் கவுன்சிலர் மகன் ஓட அரிவாளால் வெட்டிக் கொலை... பெரும் பரபரப்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமியாபுரத்தை சேர்ந்த ஜோதிமுருகன் (30) ஓட்டல் நடத்தி வந்தார். இவரது தாய் ஜெயலட்சுமி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். நேற்று முன்தினம் இரவு ஜோதிமுருகன் நண்பர்களுடன் ரயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்ததால் நடந்து கொண்டே பேசினார்.

அந்த நேரத்தில் நண்பர்கள் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தனர். இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல் பைக்கில் அங்கு வந்தது. திடீரென ஜோதிமுருகனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து ஜோதிமுருகன் உடலை மீட்டனர். உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதிமுருகன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
