முன்னாள் டிஜிபி ராஜ்மோகன் காலமானாா்... காவல்துறையினர் நேரில் அஞ்சலி!
தமிழக காவல்துறையில் முன்னாள் டிஜிபியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஏ.ராஜ்மோகன். இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். இவருக்கு வயது 87. உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா் நேற்று மே 30ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த ஏ.ராஜ்மோகன், ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று 1960ம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் இணைந்தாா். ஏஎஸ்பி தொடங்கி டிஜிபி வரை பல்வேறு பொறுப்புகளில் ராஜ்மோகன் பணியாற்றினாா்.
அவா் 1996ம் ஆண்டு தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு தலைமை இயக்குநராக இருந்தாா். 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற ராஜ்மோகன், பல்வேறு சுய முன்னேற்ற புத்தகங்களை எழுதினாா். இவா் எழுதிய 'வாழ்க்கை ஒரு வாய்ப்பு' என்ற புத்தகம் கேரள பல்கலைக்கழகத்தில் பாட நூலாக உள்ளது.
தனது பெற்றோா் நினைவாக ஏ.ஜெ. அறக்கட்டளை உருவாக்கி பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார். ராஜ்மோகனுக்கு ரவி மோகன் என்ற மகனும், கீதா என்ற மகளும் உள்ளனா். அவரது உடல் கோட்டூா்புரம் கோட்டூா் காா்டன்ஸ் 4வது பிரதான சாலையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏ.ராஜ்மோகனின் உடலுக்கு ஓய்வு பெற்ற டிஜிபி ராமானுஜம் உட்பட பலா் அஞ்சலி செலுத்தினா். நேற்று அவரது உடல் ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, பெசன்ட்நகா் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
