திமுக முன்னாள் அமைச்சர் உபயதுல்லா திடீர் மரணம் !!

 
உபயதுல்லா

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். 

தஞ்சாவூர் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டவர் உபயதுல்லா. இவர் தற்போது திமுக வர்த்த அணி தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்து வந்தார். வணிக வரித்துறை அமைச்சராக இருந்த எஸ்.என்.எம்.உபயதுல்லா, தஞ்சாவூர் மாவட்ட திமுகவில் முக்கிய தலைவராக விளங்கினார்.

உபயதுல்லா

2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் அண்ணாதுரை விருது உபயதுல்லாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏராளமான திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

உபயதுல்லா

முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா மறைவை தொடர்ந்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மூத்த அமைச்சர்கள் பலரும் தஞ்சாவூர் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் பலரும் ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web