முன்னாள் ஆளுநர், சுஷ்மா ஸ்வராஜ் கணவர் ஸ்வராஜ் கவுஷல் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

 
சுஷ்மா சுவராஜ்

மிசோராம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், மறைந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் கணவருமான ஸ்வராஜ் கவுஷல் (73), நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகக் காலமானார். நேற்று மதியம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மறைந்த ஸ்வராஜ் கவுஷலின் மனைவி சுஷ்மா ஸ்வராஜ், பாஜகவின் மூத்த தலைவராகவும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர்களது மகள் பன்சூரி ஸ்வராஜ், தற்போது புதுடெல்லி தொகுதியின் பாஜக மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.


பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது 'எக்ஸ்' (X) தளத்தில், "ஸ்வராஜ் கவுஷலின் மறைவால் வேதனை அடைந்துள்ளேன். ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக அவர் தனது வழக்கறிஞர் தொழிலைப் பயன்படுத்தினார். இந்தியாவின் இளைய ஆளுநராக இருந்த ஸ்வராஜ் கவுஷலின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ் கணவர்

பாஜக மால்வியா நகர் எம்எல்ஏ சதீஷ் உபாத்யாய், மறைந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, "ஸ்வராஜ் கௌஷல் நேர்மை, ஞானம் மற்றும் அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தவர். பன்சூரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி," என்று கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!